கனடாவில் 2012 இல் மனைவியை கொலை செய்தார் என 2017இல் நாடு கடத்தப்பட்டவருக்கு 2020 இல் வந்த தீர்ப்பு!!

923

2012ம் ஆண்டு இலங்கை தமிழரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் மீது சுமத்தப்பட்டுள்ள கொலை வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கியூபெக் நீதிமன்றம் 2019ம் ஆண்டு முடிவு செய்துள்ளது.

இதன்படி, சிவலோகநாதன் தனபாலசிங்கம் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில், அவர் இல்லாது குறித்த வழக்கு 2019இல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தனபாலசிங்கத்தின் மனைவி அனுஜா பாஸ்கரன், அவரது வீட்டில் கழுத்தில் கத்திக் குத்துக் காயங்களுடன் 2012ம் ஆண்டு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த கொலை குற்றச்சாட்டுக்கு இடைக்காலத்தடை வாங்கியதைத் தொடர்ந்து தனபாலசிங்கம் சமுதாயத்துக்கு ஆபத்தானவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டு, மீண்டும் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையிலும், மேல் முறையீட்டு வழக்கில் விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்னரே தனபாலசிங்கம் 2017இல் நாடு கடத்தப்பட்டார்.


இந்நிலையில், 2019ம் ஆண்டு , நீதிமன்றத்தின் முடிவு தவறானது என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், குற்றம் சுமத்தப்பட்டவர் கனடாவில் இல்லையென்றாலும் அவர் மீதான வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என 2019இல் உத்தரவிட்டுள்ளது.

அதற்கமையை 2020ம் ஆண்டு 17ம் திகதி ஜூலை மாதம் அதாவது நேற்று முன் தினம் கனடிய உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் தனது மனைவியில் கொலைக்காக சிவலோகநாதன் தனபாலசிங்கம் மீது ஒருபோதும் குற்றம் சுமத்தப்படமாட்டாது என கனடா உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த கனடிய நிரந்தர வதிவுடமையைப் பெற்ற சிவலோகநாதன் தனபாலசிங்கம் தனது மனைவியின் கொலையுடன் தொடர்புடைய 2ம் நிலைக் கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொண்டிருந்தார்.

ஆனாலும் ஒரு நியாயமான காலத்திற்குள் இவரது வழக்கு விசாரணைகள் நடைபெறவில்லை என்ற காரணத்தினால் அவரது அரசியல் அமைப்பு மனித உரிமை மீறப்பட்டதாக இன்று கனடா உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.