கனடா மற்றும் அமெரிக்க நாட்டு எல்லையை சட்டவிரோதமாக கடந்த 21பேர் கைது!

1109

கடந்த மே மாதத்தில் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் கடந்ததற்காக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா- கனடாவுக்கிடையிலான எல்லைக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளபோதும், அத்தியாவசிமற்ற பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை என கனடாவில் புகலிடம் கோரி மே மாதம் 1,390 பேரும், ஏப்ரல் மாதத்தில் 1,570 பேரும் மனு தாக்கல் செய்ததாக கனடா தெரிவித்துள்ளது.


கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து, கிட்டத்தட்ட 57,000பேர் கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான எல்லையைத் தாண்டி அதிகாரப்பூர்வமற்ற நுழைவுவாயில்களைப் பயன்படுத்தித் தஞ்சம் கோரியுள்ளனர்.

கடந்த மார்ச் 22ஆம் திகதி முதல் ஜூன் 16ஆம் திகதி வரை சமயோசிதப் பயணத் தடையின் கீழ் 7,639 வெளிநாட்டினருக்கு கனடாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கனடா எல்லை சேவைகள் நிறுவனம் அண்மையில் தெரிவித்தது.