கனடா – மொன்றியலில் தீவிபத்து! 12 வயதான தமிழ் சிறுமி பலி!!

870

கனடா – மொன்றியல் பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று காலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீவிபத்து ஏற்பட்ட வீட்டின் அடித்தளத்தில் சிக்கிய குறித்த சிறுமி, தீக்காயங்கள் மற்றும் புகையை சுவாசித்தமை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுமி தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது உயிரிழந்த சிறுமியின் 18 வயதான சகோதரியும் 10 வயதாக சகோதரனும் இருந்துள்ளனர். எனினும், அவர்கள் இருவரும் அத்தருணத்தில் பாதுகாப்பான இடத்திற்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.


இதனிடையே, தனது பிள்ளையின் மரண செய்தியினை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயாரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த விபத்தையடுத்து அந்த பகுதியில் உள்ள வீடுகளின் அனைத்து தளங்களிலும் புகை எச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டு, அவை முறையான செயற்படுகின்றனவா? என்பதை பரிசீலிக்க வேண்டுமென பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.