கருப்பா இருந்தாலும் நல்ல அழகு : புருஷன் மேல சந்தேகம் சிறுமி கொலை வழக்கில் திருப்பம் : மனைவி பகீர் வாக்குமூலம்!!

179

சென்னை அமைந்தகரை பகுதியில் வீட்டுவேலைப் பார்த்து வந்த சிறுமி கொடூரமாக சித்ரவதைச் செய்யப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், சிறுமி கருப்பாக இருந்தாலும் பார்ப்பதற்கு மிகவும் களையாக இருந்தாள். என் கணவர் அவளிடம் தவறாக நடந்து கொண்டு வருவதாக எனக்கு சந்தேகம் இருந்தது. அதனால் கடந்த 3 மாதங்களாக சிறுமியை அடித்தும்,

சூடு வைத்தும் கொடுமை செய்து வந்தேன் என்று நவாஸ் மனைவி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை அமைந்தக்கரை மேத்தா நகர், சதாசிவ மேத்தா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஸ் (35). பயன்படுத்திய பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் இவருக்கு நாசியா ​​என்ற மனைவியும், 6 வயதில் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி நவாஸ் வீட்டில் தங்கியிருந்தபடியே கடந்த ஓராண்டு காலத்துக்கும் மேலாக வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் தீபாவளியன்று நவாஸ் வீட்டில் வேலைப் பார்த்து வந்த சிறுமி குளியலறையில் குளிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.


நீண்ட நேரமாகியும் சிறுமி வெளியே வராததால் சந்தேகமடைந்த நவாசும், அவரது மனைவி நாசியாவும் குளியலறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சிறுமி சடலமாக கிடந்ததாகவும், இதனால் பயத்தில் வீட்டை பூட்டிவிட்டு மனைவி மற்றும் குழந்தையுடன் உறவினர் வீட்டிற்கு சென்றதாக கூறியிருந்தனர்.

அதன் பின்னர் கடந்த நவம்பர் 1ம் தேதி நவாஸ் தனது வழக்கறிஞர் மூலம் சிறுமியின் மரணம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குளியலறையில் இறந்து கிடந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமியின் உடலில் பல இடங்களில் சிகரெட்டால் சுடப்பட்ட காயங்கள் மற்றும் தீக்காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் கணவன், மனைவி இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கணவன் – மனைவி இருவரும் சிறுமியை அடித்து துன்புறுத்தி வந்தது தெரியவந்தது.

தீபாவளி அன்று காலை நவாஸ், நாசியா மற்றும் அவர்களது நண்பர் லோகேஷ் ஆகியோர் சிறுமியை கொடூரமாக தாக்கியுள்ளனர். சிறுமியின் மார்பில் அயர்ன் பாக்ஸால் சூடு வைத்துள்ளனர்.

இந்த தாக்குதலில் சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மூவரும் சேர்ந்து சிறுமியை குளியலறைக்குள் இழுத்துச் சென்று போட்டுவிட்டு, பயந்துபோன கணவன்-மனைவி இருவரும் ஊதுபத்தியை கொளுத்தி வைத்து விட்டு உறவினர் வீட்டிற்கு சென்று தலைமறைவாகினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் லோகேஷ் மூலம் வக்கீலை ஏற்பாடு செய்து போலீசாருக்கு தகவல் கொடுத்தது தெரிய வந்தது.

இதையடுத்து கணவன் மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுமி கொலை குறித்து வீட்டின் உரிமையாளர் நாசியா போலீசாரிடம், ‘கருப்பாக இருந்தாலும் கலையாக இருந்த சிறுமியின் மீது, தனது கணவரின் பார்வை திரும்பியதாக சந்தேகப்பட்டு கொடூரமாக சித்தரவதை செய்ததாக’ வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிறகு கைது செய்யப்பட்ட 6 பேரையும் அமைந்தகரை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வருகிற நவம்பர் 16ம் தேதி வரை 6 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அனைவரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.