கருப்பினத்தவர் கழுத்தில் முழங்காலை அழுத்திய லண்டன் பொலிசார்: கொந்தளிப்பை ஏற்படுத்திய இன்னொரு காணொளி!!

1044

லண்டனில் கருப்பினத்தவர் ஒருவரின் கழுத்தில் பொலிசார் முழங்காலால் அழுத்துவதைக் காட்டும் காட்சிகள் வெளிவந்த பின்னர் அதிகாரி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

லண்டனில் இஸ்லிங்டன் பகுதியில் பதிவு செய்யப்பட்ட குறித்த வீடியோவில், இரண்டு அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கருப்பினத்தவரை கைது செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவரை நடைபாதையில் வைத்திருப்பதைக் காட்டுகிறது.

இந்த வீடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், வியாழன்று பொலிஸ் அதிகாரி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


இதனிடையே, மாநகர துணை பொலிஸ் கமிஷனர் சர் ஸ்டீவ் ஹவுஸ் இந்த காட்சிகள் மிகவும் வருத்தமளிப்பது என்றும் இது பொலிஸ் கண்காணிப்புக் குழுவுக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.

பொதுமக்கள் மத்தியில் அச்சுறுத்தும் வகையில் கத்தியை காண்பித்ததாலையே, அந்த 45 வயது கருப்பினத்தவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

சில நிமிடங்களுக்கு பின்னர் அந்த நபர் உட்கார வைக்கப்பட்டு, பொலிசாருடன் அவர் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.

கைது நடவடிக்கையின் போது அதிகாரிகள் பார்வையாளர்களால் எதிர்கொள்ளப்பட்ட நிலையில் பல பொலிஸ் கார்கள் சம்பவ இடத்தில் குவிந்ததாகவும் தெரியவந்துள்ளது.