கர்ப்பமான 16 வயது சிறுமி… போக்ஸோவில் தந்தை, பக்கத்து வீட்டுக்காரர் கைது : அதிர்ச்சி சம்பவம்!!

703

மகாராஷ்டிரா…

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் திலக் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது இளம் பெண் சமீபத்தில் வயிற்று வலி என்று கூறி தனது தாயை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில் அவர் கர்ப்பமாக இருக்கும் உண்மை அம்பலமானது.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் சிறுமியிடம் நடந்ததை கேட்டு விசாரித்துள்ளார். மருத்துவர்களும் திலக் நகர் போலீசாரிடம் தகவலை கூறி சிறுமியை ஆலோசகர் மூலமாக பேசி விசாரித்துள்ளனர்.

அப்போது தான் அதிர்ச்சி உண்மை அம்பலமாகியுள்ளது. இந்த சிறுமிக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் 32 வயது நபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கியுள்ளர்.


இந்நிலையில், அதே மாதம் 28ஆம் தேதி அன்று சிறுமியின் தாயார் வேலைக்கு சென்ற போது தந்தையும் சிறுமியும் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது அந்த சிறுமியை அவரது தந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். சம்பவம் நடந்து சுமார் 4 மாதங்கள் கடந்த நிலையில் தனக்கு நேர்ந்த அவலத்தை வெளியே கூற முடியாமல் தவித்து வந்துள்ளார். தற்போது சிறுமி கர்ப்மடைந்ததால் உண்மை வெளியே அம்பலமானது.

சம்பவம் தொடர்பாக போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியின் தந்தை மற்றும் பக்கத்துவீட்டு இளைஞர் இருவரையும் கடந்த வியாழக்கிழமை கைது செய்தது.

கர்ப்பமான சிறுமிக்கு மருத்துவர்கள் மூலம் உரிய சிகிச்சை மற்றும் மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.