கர்ப்பிணி மனைவி, மகள் கொலையில் திடீர் திருப்பம் : கணவன் வாக்குமூலம்!!

145

கரூர் மாவட்டத்தில் மனைவியையும், 5 வயது மகளையும் கழுத்தை அறுத்து கொலைச் செய்த கணவன், தானும் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த கணவனின் போலீசார் விசாரிக்கையில், போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தீராத நோய் இருந்ததாக பொய் கூறியது தெரிய வந்துள்ளது. அடுத்த அதிர்ச்சியாக மனைவி கர்ப்பமாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.

கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகணேஷ். தென்காசியை சேர்ந்த இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கரூர் வந்து வேலைப் பார்த்துள்ளார். கடந்த 6 வருடங்களுக்கு முன்பு கல்பனா எனும் பெண்ணை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு சாரதிபாலா ( 5) என்ற மகள் உள்ளது.

இந்நிலையில் கல்பனா 3 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் மருத்துவமனைக்கு தனது கர்ப்பிணி மனைவியை சிகிச்சைக்காக அழைத்து சென்று விட்டு திரும்பிய செல்வகணேஷ், தனது கர்ப்பிணி மனைவியையும், மகளை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு தானும் மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு வந்து, செல்வகணேஷை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வெங்கமேடு போலீசார் இரண்டு பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வகணேஷிடம் விசாரித்துள்ளனர்.


போலீசாரிடம் கைது நடவடிக்கைக்கு பயந்து, தனக்கு தீரா தொற்று நோய் இருப்பது உறுதியானதாகவும், இது வெளியில் தெரிந்தால் தனக்கு மட்டுமின்றி தனது மனைவி, குழந்தைக்கும் அசிங்கம் என்பதால் இவ்வாறு செய்தேன் என செல்வகணேஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இதில் சந்தேகமடைந்த போலீசார், உடல்நலம் தேறிய செல்வகணேஷிடம் மீண்டும் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது செல்வகணேஷ் போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து அவ்வாறு கூறியதாகவும், தனக்கு தொற்று நோய் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

செல்வகணேஷ் மீது கொலை உள்ளிட்ட இரு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து கொலைக்கான உண்மை காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.