கறிவிருந்து வைத்து மதுவை ஊற்றிக் கொடுத்து கணவரை கொலை செய்த மனைவி!!

722

ஆந்திர மாநிலம்….

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வசித்து வருபவர் 35 வயது ரமேஷ். இவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஷிவானி. இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள்.

ஷிவானிக்கு கடந்த சில காலமாக ரமேஷின் நண்பரான ராமாராவுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் தகாத உறவாக மாறியது. இது ரமேஷிற்கு தெரிய வந்ததால் ஷிவானியை கண்டித்துள்ளார் . கணவரால் தங்கள் கள்ளக்காதலுக்கு தடை ஏற்படலாம் என்பதால் காதலனுடன் சேர்ந்து ரமேஷை கொலை செய்ய ஷிவானி திட்டமிட்டார்.

அதற்கு முன் கணவருக்கு எந்த சந்தேகமும் வராத வகையில் அவருக்கு பிடித்த மட்டன் குழம்பு வைத்து உணவு பாரிமாறினார். கணவருக்கு தன் கையால் மது ஊற்றிக் கொடுத்தார். தன்னிலை இழந்ததும் இதற்காக காத்துக் கொண்டிருந்த ஷிவானி காதலன் மற்றும் அவரது நண்பர் நீலா ஆகியோரை வரவழைத்து தலையணையால் அமுக்கி கணவரை கொலை செய்தார்.


அக்கம்பக்கத்தில் தனது கணவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக ஷிவானி நாடகமாடினார். ஆனால், அவர்களது நாடகத்தை போலீஸார் முதற்கட்ட விசாரணையிலேயே கண்டுபிடித்து விட்டனர். இதன் அடிப்படையில் ஷிவானி, ராமாராவ் மற்றும் நீலா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

கணவரைக் கொல்வதற்கு முன்பு ஷிவானி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அதில் ரமேஷ் அதிக மதுபோதையில், ‘எனது மனைவி மிகவும் தெளிவானவள்.

போதிய படிப்பறிவு இல்லாவிட்டாலும் வழிகாட்டினால் போதும், சிறப்பாக செயல்படக்கூடியவள். என் மனைவியே எனது வாழ்க்கை. நான் இருக்கும் வரை தைரியமாக இருப்பாள். நான் இறந்தாலும் அவள் தைரியமாக இருக்க வேண்டும். என் மனைவி தான் பெஸ்ட்’ என பேசியுள்ளார். போலீஸில் சிக்காமல் இருக்க ஷிவானி தனது கணவரை தூண்டி இந்த வீடியோவை எடுத்துள்ளார்.