கல்யாணத்திற்கு பிறகும் காதல மறக்க முடியல… புதுமணப்பெண் காதலனுடன் எடுத்த விபரீத முடிவு!!

280

கர்நாடக மாநிலத்தில் வசித்து வருபவர் 19 வயது அனுஷா . இவர் அதே பகுதியில் வசித்து வரும் 21 வயது வேணு என்ற இளைஞருடன் பழகி வந்தார். நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அனுஷாவை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர்.

அனுஷாவால் திருமணத்திற்கு பிறகும் தன் காதலை மறக்க முடியாமல் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் விரைவில் ஆடி மாதம் பிறக்க இருப்பதால் அனுஷா தன் பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர்.

அங்கு தனது காதலனை சந்தித்த அனுஷா தான் தற்கொலை செய்ய இருப்பதாக கூறியுள்ளார். இதற்கு அந்த இளைஞரும் தானும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக கூறி இருவரும் சேர்ந்து திட்டமிட்டனர்.

அதன் பிறகு இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் சடலத்தையும் மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வாழ்க்கையில் ஒன்று சேர முடியவில்லை என்பதால் இப்படி ஒரு விபரீத முடிவை இருவரும் எடுத்திருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.