திருமணமாகி 12 நாட்களே ஆன நிலையில் மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாத கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான முத்துமணி கடந்த 18ம் தேதி தனது 30 வயது கணவர் ராமையாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவர்கள் சென்ற வாகனம் திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முத்துமணி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், லேசான காயம் அடைந்த ராமையா, மனைவி இறந்த தகவல் அறிந்ததும், மனவேதனை அடைந்தார். மனைவியை இழந்த சோகம் தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.