கல்லுாரி மாணவி தற்கொலை… மற்றொரு மாணவி மாயம்.. விசாரணை தீவிரம்!!

501

திருப்புவனம்…

திருப்புவனம்-திருப்புவனம் அருகே லாடனேந்தலில் பேராசிரியைகள் திட்டியதால் கல்லூரி மாணவி எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள லாடனேந்தலைச் சேர்ந்த அழகுராஜா என்பவரின் மகள் அருணா (19). இளம்பெண் அருணா, பூவந்தி தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், அவர் கல்லூரியில் சக மாணவி ஒருவர் சில நாட்களுக்கு முன்பு காணாமல்போனார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கல்லூரியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.


அந்த பதிவில் மாயமான மாணவியும், அருணாவும் கல்லூரி வாசலில் பேசியபடி நிற்பது தெரிந்தது. இதனையடுத்து பேராசிரியைகள் மற்றும் மாயமான மாணவியின் பெற்றோர் இவரிடம் விசாரித்துள்ளனர்.

இதனால் பதற்றத்துடன் இருந்த மாணவி அருணா நான்கு நாட்களுக்கு முன் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவர் மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனால் கோபமடைந்த மாணவி அருணாவின் உறவினர்கள், மாணவி மாயமானது குறித்து எதுவும் தெரியாது எனக்கூறியபோதும் தொடர்ந்து மனஉளைச்சல் கொடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியைகள் குற்றம்சாட்டினர்.

எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினர். இது குறித்து திருப்புவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.