கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை : வைரலாகும் வீடியோ!!

510

உத்தரப்பிரதேசம்…

பேராசிரியர் ஒருவர், கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லைத் தருகிற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் பகுதியில் உள்ள அரசு ஐ.ஐ.டி. கல்லூரி பேராசியர் விஜய் சிங், அதே கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருக்கு, வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுக்கிறார்.

அதை வீடியோவாகவும் பதிவு செய்யச் சொல்கிறார். பேராசிரியர், அந்த வீடியோவில் மாணவியைக் கட்டிப் பிடித்து, மாணவியின் அந்தரங்க இடங்களில் கை வைத்து துன்புறுத்துகிறார். பேராசிரியரின் இந்த செய்கையைத் தடுக்க முடியாமல், மாணவி தரையில் அமர்ந்து தவிர்க்க நினைக்கிறார்.

அப்போதும் மாணவியை விடாது, தொடர்ந்து அந்த பேராசிரியர் மாணவியின் அந்தரங்க பகுதிகளைத் தொட்டு எல்லை மீறுகிறார். இந்த காட்சிகள் வீடியோவில் பதிவாகிறதா என்பதையும் உறுதி செய்து கொள்கிறார்.


மாணவியின் முகத்தையும் வீடியோவில் பதிவு செய்ய போராடுகிறார். முகத்தைக் காட்ட மறுத்த அந்த மாணவி எவ்வளவோ கெஞ்சியும் விடாமல் அந்த ஆசிரியர் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கிறார்.

இயற்பியல் பேராசிரியரும், சமூக ஆர்வலருமான அருணேஷ் குமார், இந்த வீடியோவை, மாணவியின் முகத்தை மறைத்து, அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படுவது நம்ம மாநிலத்தில் துரதிஷ்டவசமான சம்பவம் என்று குறிப்பிட்டு பதிவு செய்திருக்கிறார்.

ட்விட்டரில் ட்ரெண்டான இந்த வீடியோவை பலரும், உத்தரப்பிரதேச காவல்துறைக்கு டேக் செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். இதை அடுத்து உத்தரப் பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆசிரியரை கைது செய்துள்ளனர் .

அந்த ஆசிரியரின் பெயர் விஜய் சிங். கட்ராவில் உள்ள ஐடிஐ கல்லூரியில் அவர் ஆசிரியராக உள்ளார். புகார் அளித்திருந்த 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்துள்ளனர் மிர்சாபூர் போலீஸ். பண்டிகை கொண்டாட்டத்தின் போது இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.