சென்னை..

சென்னை, பூந்தமல்லி பகுதியில், ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக் காதலியின் மகளை கொன்று ஆசையை தீர்த்துக்கொண்டு , தப்பி சென்ற நபரை மும்பையில் வைத்து கைது செய்த்னர்.

சென்னை, பூந்தமல்லி, செந்நீர் குப்பம், மேட்டு தெருவை சேர்ந்தவர் அம்சவல்லி(40), இவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவரது மகள் சங்கீதா(18). நான்கு ஆண்டுகளாக கணவரை பிரிந்து, அம்சவல்லி, மகள் சங்கீதாவுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், அம்சவல்லிக்கும், அதேபகுதியில் வசித்து வந்த உளுந்தூர் பேட்டை ராஜூ (38) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அடிக்கடி அம்சவல்லி வீட்டிற்கு ராஜூ வந்து செல்வார். அப்போதெல்லாம் சங்கீதா மீது ராஜூக்கு ஆசை வந்தது. சங்கீதாவிடம் அன்பாக பழகினார்.

கடந்த வாரம், அம்சவல்லி வேலைக்கு சென்றார். இதையறிந்த ராஜு, அவரின் வீட்டுக்கு சென்றார். அங்கு சங்கீதா தனியாக இருந்தார். தான் ஆசைக்கு இணங்குமாறு சங்கீதாவிடம் வற்புறுத்தினார்.

அதற்கு மறுத்த சங்கீதா, என் தாயுடன் நெருங்கி பழகும் நீ, என் மீது ஆசைப்பட வெட்கமில்லையா என கேட்டு சண்டையிட்டுள்ளார். போதையில் இருந்த ராஜூ,சங்கீதாவின் கழுத்தைநெரித்து கொலை செய்துவிட்டு பிணத்துடன் உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் மும்பைக்கு தப்பி சென்ற ராஜூவை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்தனர். விசாரணையில், ஏற்கனவே குற்றவழக்கில் ராஜூ தொடர்புடையவர் என்றும் சங்கீதா மீது ஆசைப்பட்டு, அவரை கொன்று தான் இச்சையை தீர்த்ததும் கண்டுபிடிக்கபட்டது.















