கள்ளக்காதலனுடன் ஸ்டேட்டஸ் வைத்து கெத்து காட்டிய மனைவி… அவமானத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

369

கள்ளக்காதலனுடன் கொஞ்சும் விதமாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் வாட்ஸ்-அப் கணக்கிலும், சமூக வலைத்தளப் பக்கங்களிலும் வெளியிட்டு மனைவி கெத்து காட்டிய நிலையில், அவமானத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பெருநகர் கிராமத்தைச் சேர்ந்த குப்பன் மகன் ராம்குமார் (வயது 30), ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஜெய சத்யா (வயது 25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ராம்குமார்-ஜெயா சத்யா தம்பதிக்கு ஐந்து வயதில் ஒரு மகனும், மூன்று வயதில் ஒரு மகளும், ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவர்களது காதல் திருமணத்தை அதே பகுதியை சேர்ந்த ராம்குமாரின் நண்பர் குறளரசன் (வயது 30) என்பவர் நடத்தி வைத்தார்.

இந்நிலையில் குறளரசனுக்கும், ஜெய சத்யாவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. இது ராம்குமாருக்கு தெரியவரவே, இருவரையும் கண்டித்துள்ளார். இந்நிலையில் குறளரசனும், ஜெயா சத்யாவும் ஒரு வாரத்திற்கு முன்பு சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டனர். இதை பார்த்த ராம்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே வீட்டுக்குச் சென்று மனைவியிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். ஜெய சத்யா பதிலளிக்காததால் கோபமடைந்த ராம்குமார், குறளரசனிடம் சென்று நியாயம் கேட்டார்.


அப்போது, ​​இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ராம்குமாரை குறளரசன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த ராம்குமார் தொடர்ந்து மனைவி வாட்ஸ்-அப் பக்கத்தில் கள்ளக்காதலனுடன் நெருக்கமான புகைப்படத்தை ஸ்டேட்டஸ் வைத்து வந்த நிலையில், அவமானத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ராஜ்குமாரை அவரது உறவினர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ராம்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ராம்குமாரின் உடல் இன்று அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது, ​​ராம்குமாரின் மரணத்துக்கு காரணமான குறளரசனை கைது செய்யக் கோரியும், உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என்றும் ராம்குமாரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.