கள்ளக்காதலியை கழட்டி விட்டு கல்யாணம்.. மனமுடைந்த காதலி எடுத்த விபரீத முடிவு!!

236

நீலகிரியில்..

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள அணிக்காடு பகுதியை சேர்ந்தவர் சசிகலா (26). இவர் குடும்ப தகராறு காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன் கணவரை பிரிந்து சித்தி வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சசிகலாவுக்கும் மஞ்சூர் அருகேயுள்ள சிவசக்தி நகரை சேர்ந்த ஊட்டி போக்குவரத்து போலீஸ்காரராக கண்ணன் (31) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் காதலாக மாறியது. இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்தார். இந்த சூழலில் சசிகலாவை ஏமாற்றி கடந்த 23ம் தேதி வேறு ஒரு பெண்ணுடன் கண்ணனுக்கு திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தை சசிகலா தடுக்க முயன்றுள்ளார். இருப்பினும் சசிகலாவால் திருமணத்தை தடுக்க முடியாமல் போனது. இதனால் மனமுடைந்த அவர் கடந்த 21ம் தேதி விஷம் குடித்தார்.


இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் சசிகலாவை மீட்டு கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சசிகலா 22ம் தேதி பரிதாபமாக உயிரிழதார்.

இதுகுறித்து சசிகலாவின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் மஞ்சூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து கண்ணனை கைது செய்து ஊட்டி சிறையில் அடைத்தனர்.