கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியார் : மருமகள் செய்த கொடூரம்!!

212

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மாமியாரை ஆண் நண்பருடன் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி எரித்த மருமகள் போலீசாரிடம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருணாமூர்த்தி என்பவரும், பன்ருட்டி பாலூரை சேர்ந்த சுவேதா என்பவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு கணவர் கருணாகரன் பணி நிமித்தாக சென்னைக்கு சென்று தங்கி வேலை செய்து வந்துள்ளார். விடுமுறை தினங்களில் மட்டுமே வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் சுவேதாவிற்கு அவர் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிக்கும் சதீஷ் குமாருடன் கடந்த இரு மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. சுவேதாவும், சதீஷ்குமாரும் அடிக்கடி திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளனர்.

சுவேதா, சதீஷ்குமாருடன் பழகுவதை அறிந்த அவரது மாமியார் ரமணி சுவேதாவை கடுமையாகக் கண்டித்துள்ளார்.

மாமியாருக்கு விஷயம் தெரிந்து விட்டதை அறிந்த சுவேதா, இரவோடு இரவாக அவரை தீர்த்து கட்டி விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.


கடந்த 30ம் தேதி இரவு காதலன் சதிஷை வீட்டுக்கு வரவழைத்த சுவேதா, மாமியார் ரமணி தூங்கி கொண்டிருந்த அறை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு அறைக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டார்.

பற்றி எரிந்த தீயில் ரமணி சிக்கி அலறித் துடித்துள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்துக் கொண்டு சென்று ரமணியை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மறுநாள் சிகிச்சை பலனின்றி ரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

தனது தாயின் இறப்பில் சந்தேகம் அடைந்த ரமணியின் இரண்டாவது மகன தட்சணாமூர்த்தி கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின்பேரில் கண்டமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் அனைத்து உண்மைகளும் அம்பலமானது.

சுவேதா கல்லூரியில் கல்விப்பயிலும் காலத்திலிருந்தே பலருடன் தொடர்பில் இருந்து வந்த தகவலும் போலீசாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, கண்டமங்கலம் போலீசார் சுவேதா மற்றும் சதீஷை கைது செய்து சிறையிலடைத்தனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் மாமியாரை கொலை செய்த மருமகள் கள்ளக்காதலனுடன் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.