கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர்… திட்டம் தீட்டி மனைவி செய்த பயங்கரம்!!

1045

கும்பகோணம்…

கும்பகோணம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, அடித்து கொலை செய்து உடலை புதைத்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம் அடுத்துள்ள கீழ்மாந்தூரைச் சேர்ந்த உத்திராபதி என்பவரது மகன் பாரதி (35). இவரது மனைவி திவ்யா (27). இத்தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். பாரதி சென்னையில் வேலை பார்த்து வரும் நிலையில் திவ்யா குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் கீழ்மாந்தூரில் நடந்த தீமிதி திருவிழாவுக்காக பாரதி ஊருக்குச் சென்றுள்ளார். ஆனால், கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் பாரதியை காணவில்லை.


இதையடுத்து அவரது உறவினர் செல்வமணி என்பவர் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் பாரதியை தேடி வந்தனர்.

ஏற்கனவே கணவன் – மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தது தெரிந்த நிலையில், திவ்யாவின் நடவடிக்கையில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து திவ்யாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததாக பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

போலீஸார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தியதில் அவர் கூறிய தகவல்கள்படி, எனது கணவருக்கும் எனக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்த போதிலும் அவர் சென்னையில் இருந்து செல்போனில் பேசும் போது அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவார்.

இதனிடையே கீழ்மாந்தூரைச் சேர்ந்த டேவிட் என்கிற சதீஷ்குமார்(38) என்பவருடன் எனக்கு காதல் உண்டானது. நாங்கள் இருவரும் தொடர்ந்து பேசி, நெருங்கி பழகி வந்தோம். கடந்த மாதம் கோயில் திருவிழாவுக்காக எனது கணவர் பாரதி ஊருக்கு வந்தபோதும் வாக்குவாதம் செய்தார்.

இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்து சதிஷ்குமாரிடம் தெரிவித்தேன். அவரும் உதவுவதாக தெரிவித்தால் இருவரும் சேர்ந்து வீட்டில் தனியாக இருந்த பாரதியை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்தோம்.

பின்னர் அவரது உடலை லோடு வேனில் ஏற்றி பட்டம் குறுக்கு ரோடு மேலே உள்ள பாலத்தின் அடியில் புதைத்தோம். உறவினர்களுக்கு என்மீது சந்தேகம் வராமல் இருக்க அனைவரிடமும் சகஜமாக பேசி வந்ததாக திவ்யா தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸார், கணவரை கொலை செய்ததாக திவ்யா மற்றும் அவரது காதலன் சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.