கள்ளக்காதல் ஜோடி சடலங்களாக மீட்பு…. திடுக்கிடும் தகவல்!!

666

ஈரோடு…..

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பொன்முடி கிராமத்தில் சாலையோரம் புதர் மண்டிய பகுதியில் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட நிலையிலும், ஆண் சடலம் மரத்தில் தூக்கிட்ட நிலையிலும் இருப்பதை கண்ட கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர்கள் விபரம் தெரியவந்தது.

சடலங்களாக கிடந்த இருவரும் அதே பகுதியை சேர்ந்த தீபன்ராஜ்(25) மற்றும் கலைச்செல்வி(33) என்பதும், இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததும் தெரியவந்துள்ளது. தீபன்ராஜ்க்கு இன்னும் திருமணமாகவில்லை. கலைச்செல்விக்கு திருமணமாகி 16 வயதில் மகளும், 13 வயதில் மகனும் உள்ளனர்.

இருவரும் கடந்த 20-ம் தேதி முதல் காணாமல் போன நிலையில், இருவரின் சடலங்களும் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.


இதில் கலைச்செல்வி தலை துண்டிக்கப்பட்டும், தீபன்ராஜ் தூக்கிடப்பட்ட நிலையிலும் சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில், அருகில் கத்தி ஒன்றையும் போலீசார் மீட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் விசாரணை நடத்தினார். இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.