காதலனுக்காக 2 வயது மகனை கொலை செய்து பாபநாசம் பட பாணியில் உடலை மறைத்த பெண்!!

568

சூரத்….

கள்ளக்காதல் கண்ணை மறைக்க, காதலனை கரம்பிடிக்க வசதியாக பெற்றெடுத்த 2 வயது மகனை பெண் ஒருவர் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு போலீசில் சிக்காமல் இருக்க குழந்தையின் உடலை தமிழில் வெளியான ‛பாபநாசம்’ பட ஸ்டைலில் மறைத்து நாடகமாடிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் நயானா மாண்டவி. இவர் குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் திண்டோலி பகுதியல் வசித்து வருகிறார். கட்டட தொழிலாளியான இவருக்கு திருமணம் முடிந்து 2 வயதில் வீர் மாண்டவி என்ற மகன் இருந்தான். இந்நிலையில் தான் நயானா அருகே உள்ள போலீஸ் நிலையம் ஒரு புகார் அளித்தார்.

புகாரில், ‛‛கட்டட வேலை செய்தபோது என் மகன் வீர் மாண்டவி மாயமாகிவிட்டான். அவனை கண்டுபிடித்து தர வேண்டும” என புகாரில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.