காதலனுடன் இளம்பெண் தற்கொலை.. கதறும் கணவன் : இப்படியும் ஓர் சம்பவம்!!

553

கர்நாடகா..

கர்நாடகா மாநிலம் யாத்கிர் மாவட்டம் ஷாஹாபுரா தாலுகா ஹுருசகுண்டகி கிராமத்தில் ஈசப்பா (22), என்ற இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சுவர்ணா (20), என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். ஆனால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுவர்ணாவுக்கு, வேறுறொரு மாப்பிளையை பார்த்து பெற்றோர் திருமணம் நடத்தி வைத்தனர்.


அவர், பெங்களூரில் தனது கணவருடன் வசித்தார். இந்நிலையில், கணவரிடம் கூறாமல் பெங்களூரில் இருந்து ஹுருசகுண்டகிக்கு நேற்று முன்தினம் மாலை அவர் வந்தார்.

அங்கு தனது காதலன் ஈசப்பாவை சந்தித்து பேசினார். அப்போது காதலர்கள் இருவரும் கண்டிப்பாக நம்மால் வாழ்வில் ஒன்றுசேர முடியாது, அதனால் சாவிலாவது ஒன்று சேருவோம் என்று எண்ணி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதற்கு ஈசப்பாவும் சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து அவர்களின் சொந்த ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்திற்கு நேற்று சென்ற இருவரும் விஷத்தை குடித்தனர்.

வாயில் நுரை தள்ளி சிறிது நேரத்தில் இறந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். காதலர்கள் இருவர் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.