காதலனைப் பார்க்க அவனது வீட்டிற்குச் சென்ற இளம்பெண் மரணம்!!

1502

இலங்கையில் பெரும் அதிர்ச்சி தரும் சம்பவமாக களுத்துறையில் காதலனைப் பார்ப்பதற்காக, காதல் வீட்டிற்கு சென்ற இளம்பெண், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வாதுவ, மொரோந்துடுவ பகுதியைச் சேர்ந்தவர் பிரசாதினி பிரியங்கிகா. 23 வயதுடைய பிரசாதினி பிரியங்கிகா,

நேற்று மதியம் களுத்துறையில் உள்ள தனது காதலனைக் காண்பதற்காக, காதலனின் வீட்டிற்குச் சென்ற போது இந்த துரதிஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பிரியங்கிகாவின் சடலத்தைக் கைப்பற்றி, மேலதிக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.