உலகின் இள வயது பிரதமர் என பெருமை பெற்ற சன்னா மரின் தன்னுடைய நீண்ட கால காதலனை கரம்பிடித்தார்.
பின்லாந்து நாட்டின் பிரதமராக கடந்தாண்டு பொறுப்பேற்றுக் கொண்டார் சன்னா மரின்(வயது 34). உலகின் இளவயது பிரதமர் என்ற பெருமையுடன் ஆட்சியை சிறப்பாகவும் நடத்தி வருகிறார்.
கொரோனா காலத்தில் துரிதமாக தகுந்த நடவடிக்கைகளை எடுத்த சன்னா மரினை பலரும் பாராட்டினர். வல்லரசு நாடுகளே திணறி வரும் வேளையில் சன்னா மரினுக்கு ஆதரவும் குவிந்தது.
இந்நிலையில் கடந்த ஞாயிறன்று தன்னுடைய நீண்ட கால காதலரான மார்க்கஸை திருமணம் செய்து கொண்டார். மிகவும் எளிமையாக 40 விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொள்ள திருமணம் நடந்து முடிந்தது.
இதுபற்றி இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள சன்னா மரின், இளமையிலிருந்து ஒன்றாக இருக்கிறோம், 16 ஆண்டு கால வாழ்க்கையில் அன்பு மகளுக்கு பெற்றோராகிவிட்டோம்.
என்னுடைய மனிதருடன் அழகான வாழ்க்கையை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.