காதலிகளுடன் சண்டை; ஒரே நேரத்தில் இரு இளைஞர்கள் செய்த அதிர்ச்சி செயல்!

641

உத்திரப்பிரதே மாநிலம்……

உத்திரப்பிரதே மாநிலம், பல்லியாவை சேர்ந்தவர்கள் பள்ளி மாணவர்களான விஷ்ணு குப்தா(17) மற்றும் பிட்டு(18).

இவர்கள் இருவரும் 10- வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில், 11-ம் வகுப்பு சேர்க்கைக்காக அருகில் உள்ள ஊருக்கு சென்றுள்ளனர்.

அப்போது, பள்ளிச் சேர்க்கையை விட்டுவிட்டு, தங்கள் காதலியை சந்தித்துள்ளனர். அப்போது அந்த இரண்டு பெண்களும் இவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனால், மனமுடைந்த இரு இளைஞர்களும், விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்தனர்.


அதில், விஷ்ணு குப்தா ராம்லீலா மைதானத்திலேயே இறந்து கிடந்திருக்கிறார். பிட்டுவும் அந்த பகுதியிலேயே சுயநினைவின்றி கிடந்திருக்கிறார்.

இதையடுத்து இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதற்கிடையே விஷாலின் தந்தை அந்த இரண்டு பெண்கள்மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இதன்பின்னர், காதல் விவகாரத்தில் 17, 18 வயதே ஆன இரண்டு பள்ளியில் படிக்கும் இளைஞர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.