காதலித்த மகள்…. ஆணவக் கொலை செய்து குப்பைத்தொட்டியில் வீசிய பெற்றோர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

710

கர்நாடகா..

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பிரியாபட்னா தாலுக்கா காகுன்டி கிராமத்தை சேர்ந்த சாலினி என்ற பெண் தனது பக்கத்து கிராமத்தில் உள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞனை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

சாலினி இந்த ஆண்டு தனது 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் போது இவரது காதல் விவகாரம் வீட்டில் தெரிந்து பையன் வீட்டு சார்பில் திருமண செய்து கொள்ள அனுமதி கேட்ட நிலையில் இந்த திருமணத்திற்கு சாலினி பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

பெற்றோர்கள் தனது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சாலினி விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தை அணுகினார். சாலினி மைனர் பெண் என்பதால் திருமணம் செய்துவைக்க காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள சாலினி முயற்சித்ததாக தெரியவருகிறது.


இதில் ஆத்திரமடைந்த சாலினி பெற்றோர்கள் கடந்த 6ஆம் தேதி இரவு சாலினியை கடுமையாகத் தாக்கி கொலை செய்து கிராமத்தின் அருகே இருந்த குப்பைத்தொட்டியில் பிணத்தை வீசி விட்டனர்.

இதன்பிறகு சாலினி தந்தை சுரேஷ் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்த நிலையில் அவரது மனைவியையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.