கடலூர்..

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரப்பெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் மகன் சரவணன். இவர், திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இதே கம்பெனியில் பணிபுரிந்த அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கொலையனூர் கிராமத்தை சேர்ந்த சேகர் மகள் கண்மணி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி, தங்களது காதலை வளர்த்து வந்தனர். இருவரும் கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி அன்று வீரப்பெருமாநல்லூர் சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் சரவணனின் பெற்றோர் வீட்டில் தங்கினர்.

கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த கண்மணி, விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.















