காமவெறி இருந்தா ரெட் லைட் ஏரியாவுக்கு வாங்க… ஏன் பெண்களை சீரழிக்கிறீங்க? விளாசும் பாலியல் தொழிலாளி!!

249

காம வெறியால் பெண்களையும் குழந்தைகளையும் பலாத்காரம் செய்து கொள்வதற்கு பதில் சோனாகஞ்சில் உள்ள ரெட் லைட் ஏரியாவில் இருக்கும் எங்களிடம் வந்து உங்கள் இச்சையை தீர்த்துக் கொள்ளுங்கள் என பாலியல் தொழிலாளி ஒரு பரபரப்பு பேட்டி கொடுத்துள்ளார்.

பெண்களின் வாழ்க்கையை சீரழிக்காதீர்கள் என்றும் பாலியல் பலாத்காரம் செய்து வாழ்க்கையை அழிக்காதீர்கள் என்றும் அந்த பெண் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். இந்த பாலியல் தொழிலாளியின் பேட்டி வைரலாகி வருகிறது.

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் பாலியல் தொழிலாளி ஒருவர் தனது கருத்தின் மூலம் ஒட்டுமொத்த மக்களின் மரியாதையை சம்பாதித்துள்ளார்.

இதுகுறித்து கொல்கத்தாவில் சோனாகஞ்ச் என்ற ரெட் லைட் ஏரியாவை (பாலியல் தொழில் செய்யும் இடங்கள்) சேர்ந்த பாலியல் தொழிலாளி ஒருவர் கூறுகையில் கொல்கத்தாவில் பாலியல் இச்சைகளை தீர்த்து கொள்வதற்கென்றே ரெட் லைட் ஏரியா இருக்கிறது.

யாருக்கு காம இச்சை இருக்கிறதோ அவர்கள் இங்கு வரலாம். அங்கு பெண்கள் ரூ 20 முதல் ரூ 50 வரை பாலியல் தொழில் செய்து வருகிறார்கள். எனவே பணிக்கு செல்லும் பெண்களை குறி வைக்காதீர்கள். நம் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். பெண்கள் மீது இச்சை இருந்தால் எங்களிடம் வாருங்கள், நீங்கள் எதிர்பார்ப்பதை நாங்கள் கொடுக்கிறோம்.

ஆனால் தயவு செய்து பெண்களின் வாழ்க்கையுடன் விளையாடாதீர்கள். பாலியல் பலாத்காரம் செய்து அவர்களை சிதைக்காதீர்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த பெண் பேசிய வீடியோ வைரலான நிலையில் அந்த பெண்ணை ஹீரோ போலே அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.


மேலும் பலாத்காரம் செய்யும் நபர்கள் இந்த பெண்ணிடம் இருக்கும் அடிப்படை மனிதத்தனத்தை கற்று கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கொல்கத்தா போலீஸாரிடம் இருந்து சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நாடு முழுவதும் மருத்துவர்களின் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டதும் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்டவை தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றன. இந்த நிலையில் சம்பவத்தினத்தன்று அந்த 36 மணி நேரம் அவசர சிகிச்சை பிரிவில் வேலை வாங்கப்பட்டார்.

அவரது கண்ணாடி தாக்கப்பட்டு கண்களில் கண்ணாடி குத்தி ரத்தம் வழிந்துள்ளது. தொண்டை எலும்புகள் கொடூரமாக உடைக்கப்பட்டன. அவரது பிறப்புறுப்பில் 150 மில்லி கிராம் விந்துணு இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் ஒருவரை மட்டும் கைது செய்துள்ளதால் போராட்டம் வலுத்து வருகிறது.