காரில் காதலனோடு உல்லாசம்.. வீடியோ எடுத்த போலி போலீஸ் : பின்னர் நடந்த விபரீதம்!!

581

டெல்லியில்…

டெல்லியில் உள்ள பிரசாத் விகார் என்ற பகுதியில் 20 வயதான கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். கடந்த ஜூலை 7ஆம் தேதி அன்று காரில் இவரும் இவருடைய காதலரும் ஒன்றாக இருந்துள்ளனர். அவர்கள் நெருக்கமாக இருந்த தருணத்தைக் கவனித்த ஒரு நபர் அதனை வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார்.

பின்னர் அந்த காரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். அந்த கல்லூரி மாணவியை வீட்டு வாசலில் விட்டு விட்டு காதலன் சென்றுள்ளார். இளம் பெண் இறங்கியதைக் கவனித்த அந்த வீடியோ நபர் அந்த இளம் பெண்ணை சென்று வழிமறித்துள்ளார்.

பின்னர் அந்த இளம் பெண்ணிடம் தான் ஒரு காவல்துறை அலுவலர் என கூறியுள்ளார். நீ உன் காதலனுடன் நெருக்கமாக இருந்ததை நான் வீடியோ எடுத்துள்ளேன் என செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோவை காட்டியுள்ளார்.


மேலும் தனது ஆசைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் இதை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவியைக் கட்டாயப்படுத்தி படிக்கட்டு பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர் இது குறித்து அந்த இளம் பெண் தனது காதலனிடம் தெரிவித்துள்ளார். உடனே இந்த சம்பவம் குறித்து அருகே இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இளம் பெண் கொடுத்த தகவலின் படி சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றச் செயலில் ஈடுபட்டவர் ரவி சோலாங்கி என காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலியான காவல் துறை அதிகாரி எனக் கூறிய இளம் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.