குகைக்குள் சிக்கிய 7 வயது சிறுவன்… துரிதமாக செயல்பட்ட முதியவர்: பின்னர் நடந்த பரபரப்பு சம்பவம்!!

889

சீனாவில் ஆற்றில் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென்று அங்கிருந்த குகைக்குள் சிக்க, அவனது தாத்தா துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சீனாவின் வென்ஜோ மாகாணத்தில் யோங்ஜியா பகுதியில் உள்ள பிரபலமான ஆறு நான்சி.

ஆபத்தான இந்த நான்சி ஆற்றில் தமது தாத்தாவுடன் சென்ற 7 வயது சிறுவன் நீந்தும்போது நிலத்தடி குகை ஒன்றில் சிக்கி, உள்ளே இழுக்கப்பட்டான்.

ஜூலை 22 ஆம் திகதி நடந்த இந்த சம்பவம் தொடர்பில் சிறுவனின் தாத்தா லாவோ யே கூறும்போது, நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென்று மாயமானான். எனக்கு அந்த நொடியில் மரண பயம் வந்துவிட்டது.

துரிதமாக செயல்பட்ட அவர் சக கிராமவாசிகளுடன் ஆற்றில் கவனமாக தேடியுள்ளனர்,


அப்போது சிறுவனின் கை வெளியே நீட்டிக்கொண்டு தரையில் ஒரு நிலத்தடி குகை காணப்பட்டது.

உடனடியாக அந்த தாத்தா சிறுவனின் கையை பற்றியபடி நகராமல் அங்கேயே இருந்துள்ளார். இதனிடையே தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த 14 மீட்புக்குழுவினர் துரிதமாக செயல்பட்டு சிறுவனை காயம் ஏதுமின்றி காப்பாற்றியுள்ளனர்.

குகைக்குள் சிக்கிய சிறுவன், சமயோசிதமாக செயல்பட்டு, தமது கை ஒன்றை இடைவெளியில் நீட்டிக்கொண்டும், தமது தலையை தண்ணீருக்கு மேலேயும் வைத்துக் கொண்டு உதவிக்கு காத்திருந்துள்ளான். ஆனால், அந்த குகையை பெயர்த்து சிறுவனை மீட்பதே கடினமாகவும் மிகுந்த சவாலாகவும் இருந்தது என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.