குடிபோதையில் தொல்லை கொடுத்த கணவனை மகன்களுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி!!

614

தேனி..

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி போதுமணி. இத்தம்பதிக்கு சூர்யா, சுகன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர்.

பாலமுருகனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால், அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். நேற்று இரவு வழக்கம்போல பாலமுருகன் வீட்டில் ரகளை செய்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த மகன்கள் மற்றும் மனைவி சேர்ந்து பாலமுருகனின் கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனர். அக்கம், பக்கத்தினரிடம் பாலமுருகன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால், அக்கம், பக்கத்தினருக்கு பாலமுருகனின் தற்கொலையில் சந்தேகம் வரவே, உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் மனைவி மற்றும் மகன்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கணவனை மகன்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக மனைவி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலுசார் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.