குடும்பம் நடத்த அழைத்த கணவர்.. வர மறுத்த மனைவி கதறக்கதற கொடூர கொலை!!

250

திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் பகுதியை சேர்ந்த கண்ணாயிரம் மகன் ஓம்பிரகாஷ்(26). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சந்தியா(22). இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

குடும்ப தகராறு காரணமாக கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவியை ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் பகுதியை சேர்ந்த கண்ணாயிரம் மகன் ஓம்பிரகாஷ்(26). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சந்தியா(22). இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம் போல கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து கோபித்துக்கொண்டு ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதையடுத்து நேற்று காலை மாமியார் வீட்டிற்கு சென்ற ஓம்பிரகாஷ், மனைவி சந்தியாவை சமாதானம் செய்து வாழ வரும் படி அழைத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ஓம்பிரகாஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தியாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் சந்தியா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


இதனையடுத்து அதிர்ச்சியடைந்த சந்தியாவின் தாய் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சந்தியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் பதுங்கியிருந்த ஓம்பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.