குண்டு பூசணிக்காயில் இப்படி ஒரு அதிசயம் இருக்கா?.. உடனே சமைத்து சாப்பிடுங்கள்..!

1010

பூசணிக்காய் என்றாலே நமக்கு அதன் வடிவம் தான் ஞாபகத்திற்கு வரும். பூசணிக்காயில் வடகம் செய்து வைத்தால் வித்தியாசமான முறையில் இந்த பூசணிக்காய் வடகம் புளிக் கூட்டு சுலபமாக 10 நிமிடத்தில் செய்து விட முடியும்.

பூசணிக்காயில் வடகம் செய்ய முடியுமா? என்றெல்லாம் யோசிக்க தேவையில்லை. மிகச்சுலபமாக சூப்பரான பூசணிக்காயில் செய்யக்கூடிய வடகம் தயார் செய்து விடலாம். அதனுடன் பூசணிக்காயை சேர்த்து கூட்டு வைத்தால் அலாதியான சுவையில் அற்புதமாக இருக்கும்.

எப்போதும் ஒரேமாதிரியாக இல்லாமல் இது போல சற்று வித்யாசமான கூட்டு வைத்தால் நீங்களும் உணவை ரசிக்கலாம், உங்கள் குடும்பத்தாரையும் அசத்திவிடலாம். பூசணிக்காய் வடகம் எப்படி செய்வது?


பூசணி வடகம் புளிக் கூட்டு செய்வது எப்படி? என்பத பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்…

பூசணிக்காய் வடகம் செய்ய தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பை 100 கிராம் என்கிற அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 4 காய்ந்த மிளகாய்களை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் 50 கிராம் பூசணிக்காயை துருவி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நன்றாக கலந்து விட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் நன்கு காய வைத்து வடகம் போல் எடுத்துக் கொள்ளுங்கள்.

புளிக்கூட்டு தேவையான பொருட்கள்:
நறுக்கிய பூசணிக்காய் துண்டுகள் – 250 கிராம், பூசணி வடகம் – 10, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் – தலா 1/4 டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1/2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு, மல்லி, கருவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை விளக்கம்:
புளியை ஊற வைத்து தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். ஒரு புறம் நறுக்கிய பூசணிக்காய் துண்டுகளை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் புளி கரைசலை விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

பூசணிக்காய் வடகத்தை சிறிது எண்ணெய் ஊற்றி லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதையும் அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். எல்லாம் சேர்த்து கூட்டு போல் கெட்டியானதும் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை முதலியவற்றை தாளித்து கொட்டி இறக்கி விடவும். பின்னர் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையை கணிசமாக குறைக்கும். மேலும் பூசணிக்காயில் விட்டமின் பி, சி, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் அதிக அளவில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பூசணிக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், குடலில் இருக்கும் புழுக்கள் வெளியேறும், கண் பார்வை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சேர்க்கும் பூசணிக்காயை இப்படி கூட்டு வைத்து நீங்களும் பயன் பெறுங்கள்.