குறைந்த வருமானம் பெருவோருக்கு நிரந்தர வீடுகள்! கோட்டபாய போட்ட உத்தரவு…

1227

நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கு வீடுகளை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாண கூட்டுத்தாபனத்திற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பாரம்பரிய முறைக்கு அப்பால் அரச நிறுவனங்கள் இலாபம் ஈட்டும் திட்டங்களை வகுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.


கடந்த 5 வருடத்தில் நிறுவனங்களை பொறுப்பேற்கும் போதும் தற்போதைய நிலைமை தொடர்பிலும் அறிக்கை ஒன்றை வழங்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வருடத்தில் மேற்கொள்ள வேண்டிய இலக்குகளை இந்த வருடத்திலேயே திட்டமிட வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.