மும்பை….

போதை மருந்து கொடுத்து இயக்குநர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் முயன்றதாகவும் தான் அதிலிருந்து தப்பியதாகவும் நடிகை ரத்தன் ராஜ்புத் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

மீ டூ என்ற டேக்கின் கீழ் நடிகைகள், தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளியுலகிற்கு தெரிவித்து வருகிறார்கள். இதை தமிழ்நாட்டில் பாடகி சின்மயி தொடங்கினார். அதில் நிறைய பேர் பாலியல் தொல்லைகளை புகாராக பதிவு செய்திருந்தனர்.

புகார் கூறிய பெண்ணின் அடையாளத்தை மறைத்து சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் சின்மயி வெளியிட்டு பெரிய மனுஷன் என்ற போர்வையில் இருப்போரின் முகத்திரையை கிழித்து வந்தார். அந்த வகையில் மீ டூவில் இந்தி நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார்.

நடிகை ரத்தன் ராஜ்புத்- இவர் இந்தி படங்களிலும் தொலைகாட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார். ஒரு சேனலுக்கு நேர்காணல் அளித்த போது அந்த மோசமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில் நான் ஒரு படத்தில் நடிக்க நடிகைக்கான தேர்வு நடப்பதை அறிந்தேன்.

இதையடுத்து நடிகை தேர்வு நடப்பதாக சொல்லப்பட்ட ஓஷிவாரா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றேன். என் ஆண் நண்பரும் உடன் வந்தார். எனக்கு ஒரு சிசுவேஷன் கூறப்பட்டது. அதற்கேற்ப நடிக்குமாறு அங்கிருந்த இயக்குநர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் கூறினார். நானும் நடித்தேன், அவரும் நான் நன்றாக நடித்தேன் என பாராட்டினார்.

பின்னர் எனக்கு குளிர்பானம் கொடுத்தார். நான் ஒரு சிப் குடித்த போதே நான் அசவுகரியமாக இருப்பதை உணர்ந்து கொண்டேன். உடனே குளிர்பானத்தில் போதை பொருளை கலந்திருக்கிறார்கள் என்பதை அறிந்தேன். பின்னர் என்னை இன்னொரு அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு எல்லா இடங்களிலும் துணிகள் வீசப்பட்டு கிடந்தன.

அங்கு ஒரு பெண் குடிபோதையில் மயங்கி கிடப்பதை பார்த்தேன். அங்கிருந்த ஒருவன் எதற்காக பாய் பிரண்ட்டை எல்லாம் இங்கு அழைத்து வருகிறீர்கள் என சப்தம் போட்டார்.

உடனே அந்த இடத்தில் ஏதோ தப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து அங்கிருந்து என் நண்பரை அழைத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டேன் என தனக்கு நடக்கவிருந்த மோசமான அனுபவத்தில் இருந்து தான் எப்படி தப்பினேன் என்பதை அவர் விளக்கியுள்ளார்.















