கேரளாவை உலுக்கிய கெளரவ கொலை… நடுரோட்டில் துடிதுடிக்க வெட்டிக்கொன்ற தாய்மாமா, தந்தை… ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!!

86

கேரளாவை உலுக்கிய ஹரிதாவின் கணவர் அனீஷ் கெளரவக் கொலைச் செய்யப்பட்ட வழக்கில், ஹரிதாவின் தந்தைக்கும், தாய் மாமாவுக்கும் ரூ.50,000 அபராதத்துடன் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2020ல் பாலக்காடு மாவட்டம் தென்குறிச்சி கெளரவ கொலை வழக்கில், பாலக்காடு கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நேற்று பரபரப்பான தீர்ப்பு வழங்கியது.

ஹரிதாவின் தந்தை தனது மகளின் காதல் கணவர் அனிஷீன் வீட்டைக் கண்காணித்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்திற்காகக் காத்திருந்த நிலையில், அனீஷூம்,

அவரது சகோதரரும் இருசக்கர வாகனத்தில் கிளம்பிச் சென்ற போது நடுரோட்டில் ஹரிதாவின் தந்தையும், அவரது தாய்மாமாவும் துல்லியமாக திட்டமிட்டு அனீஷை வெட்டிப் படுகொலைச் செய்தது நிரூபணமாகி உள்ளது.

கேரளம் திருவனந்தபுரம் அருகே உள்ள மங்களபுரம் பகுதியில் திட்டமிட்ட வன்முறை சம்பவம் நடந்தது கேரளா முழுவதுமே அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி பரபரப்பாக பேசப்பட்டது.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அனீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டதற்காக ஹரிதா மீது ஏற்பட்ட ஆழமான வெறுப்பால் ஹரிதாவின் தந்தையும் மாமாவுமான பிரபு குமார் மற்றும் சுரேஷ் ஆகியோர் இந்த கொலையை திட்டமிட்டு செய்துள்ளனர் என்று அரசு தரப்பு வாதிட்டது.


இந்த வழக்கில் சுரேஷ் முதல் குற்றவாளியாகவும், 2வது குற்றவாளியாக பிரபுகுமார் சேர்க்கப்பட்டுள்ளார். கணவரை இழந்ததால் மனமுடைந்த ஹரிதா, “எனது அனீஷேட்டனை இரக்கமின்றி கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். நீதிமன்றம் நீதி வழங்க வேண்டும்” என்று கதறினார்.

இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 25, 2020 அன்று நடந்தது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மாலையில் ஒரு தெருவில் பதுங்கியிருந்து அனீஷை கூரிய ஆயுதங்களால் தாக்கினர். அனிஷ் மற்றும் ஹரிதா திருமணம் முடிந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்த கொடூரமான செயல் நடந்தது,

இது ஏற்கனவே அவரது குடும்பத்தினரிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது. அனீஷ் கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களில் குற்றவாளிகளால் பலமுறை கொலைச் செய்யப்பட இருப்பதாகவும் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் உள்ளூர் காவல்துறையினரால் இது குறித்து விசாரிக்கப்பட்ட நிலையில், அனிஷின் குடும்பத்தினர் மற்றும் ஹரிதாவின் கூற்றுகளைத் தொடர்ந்து வழக்கு மாவட்ட குற்றப் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டது.

ஹரிதாவின் தந்தையிடம் இருந்தும், உறவினர்களிடம் இருந்தும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துக் கொண்டிருந்த போதிலும் உள்ளூர் காவல் துறை அதிகாரிகள் அனிஷுக்கு போதுமான பாதுகாப்பை வழங்கத் தவறி விட்டனர் என்றுக் கூறப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், ஹரிதாவின் தந்தை, தாய்மாமா ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று ஊர்ஜிதப்படுத்தி, இருவருக்கும் தலா ரூ.50,000 அபராதம் விதித்து, ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த அபராதத் தொகையை விதவையான ஹரிதாவுக்கு வழங்கக் கோரி உத்தரவிட்டிருந்தது.