கையில் காசு இல்லை… மாடுகளுக்கு பதிலாக மகள்கள்- விவசாயியின் கண்ணீர் பக்கம்!

974

ஆந்திராவில் மாடுகளுக்குப் பதில் கலப்பை நுகத்தடியில் தனது மகள்களைப் பூட்டி விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தை உழுதுள்ளார்.

சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அருகேயுள்ளது கே.வி புரம் கிராமம். இந்தக் கிராமத்தில் வசிப்பவர் நாகேஸ்வர ராவ், இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கால் தன்னுடைய குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்து விட்டார், நிலத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார்.

விளைச்சல் நன்றாக இருந்தும் ஊரடங்கால் சரியாக விற்க முடியாமல் போக நஷ்டம் ஏற்பட்டுள்ளது.


ஏற்கெனவே கடன் வாங்கி விவசாயம் செய்தவரின் நிலைமையை கொரோனா மேலும் மோசமாக்கியது.

இந்த நிலையில் தான் நிலத்தை உழக்கூட கையில் பணம் இல்லாத நாகேஸ்வர ராவ், தனது இரண்டு மகள்களையும் மாட்டுக்குப் பதில் ஏர் கலப்பையில் பூட்டி நிலத்தை உழுதுள்ளார்.

அவர் கூறுகையில், 20 வருஷமா டீ கடை வச்சிருந்தேன், கொரோனால எல்லாமே நஷ்டமாகிடுச்சு, காசும் இல்லை.

என்னோட கஷ்டத்தை புரிஞ்சுகிட்டு மகள்களே எனக்கு உதவி செஞ்சுட்டாங்க, என்னுடைய நிலம் எங்களை கைவிடாது என தெரிவித்துள்ளார்.