கொழும்பில் விசா விண்ணப்ப நிலையம் செல்வோருக்கு ஓர் அறிவிப்பு!!

939

கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய விசாவிற்கான விண்ணப்ப நிலையம் எதிர்வரும் 7ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக விண்ணப்பம் செய்தல் உள்ளிட்ட விபரங்களை http://vfsglobal.co.uk/lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியும்.

அத்துடன் விசா விண்ணப்ப நிலையத்திற்கு சேவைக்காக வருவோர் முன் அனுமதி பெற்றுக்கொள்வது அவசியம் என்பதுடன், அந்த தினத்தில் பிரித்தானிய விசா விண்ணப்ப நிலையமானது திறந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன் அனுமதி இன்றி வருபவர்கள் விசா விண்ணப்ப நிலையதிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


விசா விண்ணப்ப மையங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு சமூக இடவெளியை பேணுவதுடன், உடல் வெப்பநிலை சோதனைக்கு உட்படுவதுடன், முகக்கவசங்களையும் அணிவது கட்டாயமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் (COVID-19) தொற்று காரணமாக பிரித்தானியாவிற்குள் நுழைவதற்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

குறித்த புதிய கட்டுப்பாடுகளை https://www.gov.uk/uk-border-control என்ற இணையத்தளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.