கோடீஸ்வர மாப்பிள்ளை என நம்பி மணக்க நினைத்த பிரபல நடிகைக்கு உண்மையில் நடந்தது என்ன? அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

920

பெரிய கோடீஸ்வரர்கள் மற்றும் நல்ல குடும்பத்தார் என கூறி கொண்டு நடிகை பூர்ணா வீட்டுக்கு பெண் கேட்டு வந்தவர்கள் குறித்து பூர்ணா அதிர்ச்சி விலகாமல் பேசியுள்ளார்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ள பூர்ணா கேரள மாநிலம் கொல்லம் மரட் பகுதியில் வசிக்கிறார்.

பூர்ணாவுக்கு அன்வர் என்ற பெயரின் டிக் டாக்கில் அறிமுகமான நபர் தனக்கு துபாயிலும், கோழிக்கோட்டிலும் பெரிய நகைக்கடைகள் உள்ளதாக கூறி பழகியுள்ளான்.

பின்னர் பூர்ணாவை திருமணம் செய்ய விரும்புவதாக அன்வர் கூறிய நிலையில் அவர் குடும்பத்தாரை தனது வீட்டுக்கு பூர்ணா வர சொன்னார்.
வீட்டுக்கு வந்த பின்னரே அந்த கும்பல் மோசடியானது என தெரிந்த கொண்ட பூர்ணா இது குறித்து பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் அந்த கும்பலை கைது செய்தனர்.

அன்வர் என்ற பெயரில் பேசியவரின் பெயர் ரபிக் என தெரியவந்தது.


இந்த சம்பவம் குறித்து பூர்ணா தற்போது கூறுகையில், துபாயில் நடக்கும் தொழிலுக்கு பணம் தேவைப்படுவதாக என்னிடம் ரூ 10 லட்சம் ரபிக் கேட்டார்.

பின்னர் அவரின் கும்பல் மிரட்டல் விடுத்த நிலையிலேயே புகார் கொடுத்தோம். எங்கள் புகாரால் பெரிய கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

அன்வர் அலி, முஹம்மது அலி என்பது போன்ற போலி பெயர்களில் எங்களிடம் பேசினார்கள். என்னிடம் போனில் பணம் கேட்டது ஷமீமா அல்லது ரபீக்கா என எனக்கு தெரியவில்லை.

எங்களிடம் மோசடி செய்வதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு என்னிடமும் பெற்றோரிடமும் பேசினார்கள். மலபாரில் ஒரு நல்ல குடும்பத்தில் உள்ள சம்பந்தம் என்றுதான் முதலில் எங்களைத் தொடர்புகொண்டார்கள். என் அப்பாவிடமும் சகோதரனிடனிடமும் அவர்கள் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர்கள் எனச் சொன்னார்கள். மிகவும் மரியாதையோடு போனில் பேசியதால் அவர்களை வீட்டுக்கு வருமாறு அழைத்தோம்.

வீட்டுக்கு வந்தவர்களை நேரில் சந்தித்தபோதுதான் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ரமேஷ், சரத் ஆகியோர் டிரைவர் எனக் கூறினர். அவர்களைப் பார்த்தபோதுதான் சந்தேகம் வலுத்தது.

அவர்கள் வீட்டில் வந்து எங்களைத் தாக்க திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. வீட்டில் அப்போது நிறைய பேர் இருந்ததால் அவர்கள் தாக்கும் திட்டத்தைக் கைவிட்டிருக்கலாம் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.