கோயிலில் கண்டெடுக்கப்பட்ட சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்கப் புதையல்…!

904

தமிழர்களின்……

தமிழர்களின் வரலாறுகளை கண்டறியும் மற்றும் பண்டையகால வரலாறுகள் மற்றும் கட்டிடக்கலை ஆகியவை மண்ணினுள் புதைபட்டுள்ள நிலையில் தற்போது மீட்டெடுக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் கீழடி போன்ற இடங்களில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் மண்டை ஓடுகள் அகழ்வாராச்சி பணியில் பொது கண்டு பிடிக்கப்பட்டன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில் சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க புதையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோயிலின் கருவறைக்கு அருகே அமைந்துள்ள கருங்கற்களை அகற்றுகையில் இந்த புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் சோழர்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க நாணயங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


கண்டெடுக்கப்பட்ட புதையலில் சிலவற்றை உள்ளுர் மக்கள் எடுத்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தற்போது இந்த கோயிலில் திருப்பணி நடைபெற்று வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.