சிறுமிகளை விளையாட வீட்டிற்கு அழைத்துச் சென்ற 9-ஆம் வகுப்பு மாணவர்களின் அதிர்ச்சி செயல்! கைது செய்த பொலிசார்!!

487

தமிழகத்தில்……..

தமிழகத்தில் சிறுமியை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்த 9-ஆம் வகுப்பு மாணவர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயமுத்தூர் அருகே வடவள்ளி பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு பயிலும் 2 சிறுவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த இரு சிறுமிகளை தங்கள் வீட்டிற்கு விளையாட வரும்படி கடந்த 26-ஆம் திகதி அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு இவ்விரு சிறுமிகளையும் அவர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.


இது தொடர்பாக சிறுமிகள் இருவரும் தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், காவல்நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து, 2 சிறுவர்களையும் வடவள்ளி பொலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

9ம் வகுப்பு படித்து வந்த மாணவர்கள் சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது