சில வாரங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் இளைஞனுக்கு நடந்த விபரீதம்!!

786

கனடாவில்..

கனடாவில் சமீபத்தில் திருமணம் ஆன இந்திய இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் மோகாவில் உள்ள பட்டோ ஹிரா சிங் கிராமத்தை சேர்ந்தவர் அமர்பிரீத் சிங் அம்ரி (28). கபடி வீரரான அம்ரி அந்த விளையாட்டில் பல பரிசுகளை வென்று சாதித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் தனது திருமணத்திற்காக அம்ரி கனடாவுக்கு சென்றார். கனடாவில் சரேவில் அவர் வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று அம்ரி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். திருமணமான சில வாரத்தில் அவர் மரணமடைந்தது குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அம்ரியின் உடல் தகனம் செய்வதற்காக அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்படுமா என்பது குறித்து அவரது குடும்பத்தினர் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.