சீனப்படை தாக்குதலில் உயிர்நீத்த தமிழன் குறித்து கண்ணீருடன் பேசிய அவர் மனைவி! மனதை கலங்கடிக்கும் அவர் புகைப்படம்..!

942

சீனப்ப டைகளின் தாக்குதல் காரணமாக உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர் பழனி குறித்து அவர் மனை வி உருக்கமாக பேசியுள்ளார்.

தங்கள் எல்லைக்கு அருகில் ராணுவ விமான தளம், 66 முக்கியச் சாலைகளை இந்தியா நிர்மாணிப்பதால் கோப முற்ற சீனா, இந்தியாவை அச்சுறுத்தும் நோக்கில் படைகளைக் குவித்து வந்தது.

பதிலுக்கு இந்தியாவும் தனது துருப்புகளைக் குவிக்க எல்லையில் பதட்டம் நிலவி வந்தது. இந்நிலையில், இருதரப்பினை சேர்ந்த இரானுவ அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தி பதட்டம் தனிந்ததாக ஊடகத்திற்குச் செய்தியினை வெளியிட்ட வண்ணமிருந்தனர்.

இவ்வேளையில், இன்று உயரமிகுந்த பனி சிகரமான லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கி ல் இந்திய இராணுவத்தின் கர்னல் நிலை அதிகாரி மற்றும் இரு இராணுவ வீரர்களும் சீனப்ப டையினரால் கொல்லப்பட்டதாகச் செய்தியினை வெளியிட்டிருந்தது இந்திய இராணுவம்.


இதில் வீரமரணமடைந்த மூவரில் ஒருவர் ராமநாதபுர மாவட்டம் திருப்பாலைக்குடி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கடுக்கலூர் கிராமத்தைச் சே ர் ந் த காளிமுத்து என்பவரது மகனான பழனி என்பவர். இந்திய இராணுவத்தில் ஹவில்தாரராகப் பணிபுரியும் இவருக்கு வானதி தேவி என்ற ம னைவியும் பிரசன்னா (10) என்கின்ற ஆண் குழந்தையும் திவ்யா (7) என்கின்ற பெண் கு ழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் நாட்டுக்காக வீரமரணம் அடைந்த பழனி குறித்து அவர் மனைவி வானதி தேவி கண்ணீருடன் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், எங்கள் மகன் பிரசன்னாவை கூட இராணுவத்தில் பிற்காலத்தில் சேர்க்க நினைத்தார் என் கணவர் பழனி என கூறினார்.

இந்த வார்த்தையை வானதி தேவி கூறிய போது கண்ணீர் விட்டு அழுதார், இந்த புகைப்படம் வெளியாகி பலரின் மனதை யும் கலங்கடித்துள்ளது.