சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் அவுஸ்திரேலிய கும்பல்: வெளிவரும் பகீர் பின்னணி!!

882

அவுஸ்திரேலியாவில் படித்து வரும் சீன மாணவர்களை குறி வைத்து கும்பல் ஒன்று அவர்களை மிரட்டி கோடிகணக்கில் பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஏராளமான சீன மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் பணக்காரக சீன மாணவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் அவுஸ்திரேலிய கும்பல் ஒன்று அவர்களை குறி வைத்து கடத்தல் நாடகத்தை அரங்கேற்றி பல மில்லியன் டொலர்கள் தொகையை பறித்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

சீன மாணவர்களை மிரட்டி, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வர சொல்லும் அந்த கும்பல் அவர்களை அங்கிருந்து காரில் கடத்தி சென்று ஏதாவது ஒரு அறையில் அடைத்து வைக்கின்றனர். கடத்தப்பட்ட மாணவர்களை அரை நிர்வாணமாக்கி கயிற்றில் கட்டிப் போட்டு , மாணவரின் செல்போனிலேயே அந்த காட்சியை வீடியோவாக இந்த கும்பல் பதிவு செய்யும்.

பிறகு, அந்த வீடியோவை சீனாவில் வசிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு கடத்தப்பட்டவரின் செல்போனிலிருந்தே அனுப்பி வைக்க கூறுவார்கள். இதனையடுத்து, இரு நாட்களுக்கு , கடத்தப்பட்டவரின் செல்போன் இணைப்புகளை இந்த கும்பல் துண்டித்து வைத்து விடும்.


இரு நாட்களுக்கு பிறகு, கடத்தல் கும்பல் மீண்டும் கடத்தப்பட்ட மாணவரின் செல்போனில் இருந்தே பெற்றோரை தொடர்பு கொண்டு இவ்வளவு பணம் கொடுத்தால் விட்டுவிடுவோம் என்று மிரட்டுவார்கள்.

இந்தச் சூழலில் கேட்கும் பணத்தை கொடுக்க மாணவர்களின் குடும்பத்தினர் தயாராக இருப்பார்கள்.

இவ்வாறு , சீன மாணவர்கள் 8 பேரை கடத்திய மர்மக்கும்பல் இந்த ஆண்டில் மட்டும் பல மில்லியன் டொலர்களை கறந்துள்ளது. இதையடுத்து,

சிட்னியில் படித்து வரும் சீன மாணவர்கள் கடும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

அலைபேசியில் ஏதேனும் மிரட்டல் விடுக்கப்பட்டால் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளிக்க வேண்டுமென்று சீன மாணவர்களை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.