தமிழகத்தில் பிரசவ நேரத்தில் மனைவியின் அருகில் இருக்க முடியவில்லை என்பதாலும், இ-பாஸ் கிடைக்காத காரணத்தினாலும், கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விக்கி. அங்கிருக்கும் தனியார் சாயப்பட்டறையில் கூலி வேலை செய்து வரும் இவருக்கும் சென்னை தாம்பரத்தை சேர்ந்த ரோஜா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு ரோஜா கர்ப்பமாகியதால், சில தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் குழந்தை பிறக்கப்போவதாக, விக்கிக்கு மாமியார் போன் செய்து சொல்லியுள்ளார்.
இதைக் கேட்டவுடன், பிரசவ நேரத்தில் மனைவியுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட விக்கி,சென்னை செல்ல இ -பாஸ் பதிவு செய்தார். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.
இதனால் கடுமையான விரக்தி அடைந்துள்ளார். இருப்பினும் கடந்த 20-ஆம் திகதி இவர்களது முதலாம் ஆண்டு கல்யாண நாள் வந்தது, அப்போதாவது மனைவியுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அதுவும் நடக்கவில்லை.
இந்த நேரத்தில் இன்று ரோஜாவுக்கு பிரசவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், குடும்பத்தினர் உடனடியாக விக்கிக்கு போன் செய்துள்ளனர்.
அப்போது போன் எடுக்காததால், உடனடியாக நண்பர்களுக்கு போன் செய்து தகவலை தெரிவிக்க, உடனே அவர்கள் விக்கி வீட்டிற்கு சென்று பார்த்த போது, தூக்கில் தொங்கிய நிலையில் கிடைந்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த பொலிசார் அவரின் உடலை பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பிரசவத்தின்போது, தன் கூடவே இருக்க வேண்டும் என்று ரோஜா ஆசைப்பட்டு சொல்லிகொண்டே இருந்தாராம், அதைகூட நிறைவேற்ற முடியவில்லையே என்பது தான் விக்கிக்கு தாங்க முடியாத சோகத்தை தந்துவிட்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.