கர்நாடக மாநிலம்……..

கர்நாடக மாநிலம் கோலாரில் தைவானை சேர்ந்த ஐபோன்களை உற்பத்தி செய்யும் விஸ்ட்ரான் நிறுவனம் அமைந்துள்ளது.அங்கு விஸ்ட்ரான் லெனோவா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கான ஐடி தயாரிப்புகளையும் இது தயாரிக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் சில மாதங்களாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என அவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

தொழிலாளர்கள் சேரும் போது அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறைந்து தரப்படுகிறது. சில தொழிலாளர்கள் தங்களுக்கு நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் கு ற் ற ம் சாட்டி இருந்தனர்.

இது தொடர்பாக தொழிலாளர்கள் அமைப்புகள் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியது.ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.தொடர்ந்து ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் கடந்த 12ம் திகதி சனிக்கிழமை அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள் கற்களை வீசி கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் கதவுகளை உடைத்தனர் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக விஸ்ட்ரானின் நிர்வாக அதிகாரி டி.டி.பிரசாந்த் காவல்துறைக்கு பு கா ர் அளித்தார்.

அந்த புகாரில் சேத மதிப்பு ரூ .437 கோடியாக இருக்கும் என அந்நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 4 கார்கள், 2 கோல்ஃப் கார்கள், கேண்டீன் பகுதி, டிவிக்கள், லேப்டாப்கள், தொலைபேசிகள், உற்பத்தி இயந்திரங்கள், ஒரு ஏடிஎம் இயந்திரம், தனிப்பட்ட ஆவணங்கள், பணம் மற்றும் பலவற்றை உள்ளடக்கியதாக இந்த சே த ம் உள்ளது என பு கா ர் கூறப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தில் கலந்து கொண்ட 160 பேரை கைது செய்த காவல்துறையினர் 7 ஆயிரம் பேர் மீது வ ழக் கு பதிவு செய்துள்ளனர். அதில் 5 ஆயிரம் பேர் அடையாளம் தெரியாத ஒப்பந்ததாரர்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
















