
கும்மிடிப்பூண்டி அருகே மனைவியைக் கொன்று புதைத்த சம்பவம் பரபரப்பாகி உள்ளது. 26 வயது பிரியா எனும் இளம்பெண், தனது கணவர் சிலம்பரசன் (39) எனும் பெயிண்டிங் தொழில் செய்து வந்தவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, பரிதாபமாக உயிரிழந்தார். இவர்களுக்கு 6 மற்றும் 7 வயதுடைய இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சிலம்பரசன் மனைவியின் நடத்தை குறித்து சந்தேகமடைந்து கோபத்தில் கடந்த அக்டோபர் 14ம் தேதி இரவு பிரியாவை தாக்கி உள்ளார்.
அதன் பின்னர் பிரியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்த பின்னர், பிரியாவின் உடலை பிளாஸ்டிக் பேரலில் போட்டு மூடி, மோட்டார் சைக்கிளில் எளாவூர் ஏழு கண்பாலம் பகுதிற்கு கொண்டு சென்றார். அங்கு பல்ளம் தோண்டி டிரம்முடன் பிரியாவின் உடலை புதைத்தார்.
பிரியாவின் தந்தை சீனிவாசன் (55), தனது மகளைக் காணவில்லை என்று புகார் அளித்ததின் அடிப்படையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ்பாபு முன்னிலையில், உடலை கண்டுபிடித்து முறையாக பரிசோதனை செய்யப்பட்டு, சிலம்பரசனை கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், இந்த கொலை சம்பவம் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு மற்றும் நீண்ட கால மன அழுத்தத்தையும் வெளிப்படுத்துகிறது. விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. குற்றச்சாட்டின் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.















