லேசா லேசா, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க என்ற படத்தில் நடித்த நடிகர் ஷாம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் இவர் தனது வீட்டில் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடபட்டுள்ளார்.
இந்த தகவல் காவல்துறையினருக்கு ரகசியமாக கிடைத்ததால், நேற்றிரவு ஷாம் வீட்டிற்குள் நுழைந்த காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சோதனையில் நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டதையறிந்த பொலிசார் உடனடியாக ஷாம் உட்பட அனைவரையும் கைது செய்து தற்போது ஜாமினில் விடுவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தின் விசாரணையில் நடிகர் ஷாம், தன் வீட்டை சூதாட்டம் நடத்தும் கிளப் போன்று பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் வாரந்தோறும் புதன்கிழமையில் பிரபல நடிகர், நடிகைகள் வந்து இந்த சூதாட்டத்தில் கலந்து கொள்வதுடன், போதைப்பொருட்களைப் பயன்படுத்திச் செல்வதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் இரவு 11 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த சூதாட்டம் காலை 4 மணிவரை நடைபெறுவதாகவும், இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு அந்த பகுதியில் இருக்கும் பொலிஸ் உயர்அதிகாரி ஒருவருக்கு ஒரு லட்சம் லஞ்சம் கொடுப்பதும் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் ஷாம் வீட்டில் பிரபல நடிகர் ஒருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டு ரூ.10 லட்சத்தினை இழந்தது மட்டுமின்றி இதுகுறித்து பிரச்சினை செய்து அடி வாங்கிச் சென்றுள்ளாராம்.
இதனால் குறித்த பிரபலம் தான் கோபத்தில் இதனை பொலிஸாரிடம் தெரிவித்திருக்க வேண்டும் என்று கூறப்படும் நிலையில், குறித்த 10 லட்சத்தினை இழந்து அடி வாங்கிய பிரபலம் யார் என்பது பலரது கேள்வியாக இருந்து வருகின்றது.
இருந்தாலும் தனது நடிப்பினை மிகவும் அழகாக செய்து வந்த ஷாம் இவ்வாறு சட்டவிரோதமான காரியத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்யினையும் ஏற்படுத்தியுள்ளது.