செல்போனில் நீண்ட நேரம் பேசிய மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூர செயல் : சினிமாவை மிஞ்சிய சம்பவம்!!

746

ஜார்கண்டில்..

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரிதிஹ் நகரில் மனிஷ் பரன்வால்- அர்ஜுமன் பானோ என்ற இளம்தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு அண்மையில் தான் திருமணம் முடிந்தது. எனினும் திருமணம் முடிந்த சில நாட்களுக்கு பிறகே, தம்பதி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட தொடங்கியது.

மனைவி அர்ஜுமன் பானோ நீண்ட நேரம் செல்போனில் பேசுவதே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அவர் வேறு நபர்களிடம் நீண்ட நேரம் போனில் பேசுவது கணவர் மனிஷ் கண்டித்துள்ளார்.

எனினும் அவர் கேட்காமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பரில் கணவன், மனைவி இருவரும் வெளியே சென்றுள்ளனர். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அமர்ந்துபேசும்போது,


மனைவி அர்ஜுமன் பானோ கழுத்தை நெறித்து மனிஷ் கொலை செய்துள்ளார். பின்னர் தனது நண்பர் ஒருவரின் வீட்டில் உடலை புதைத்துவிட்டு ஏதும் நடக்காதது போல இருந்துள்ளார்.

அதன்பின்னர் சில நாள்கள் கழித்து மனைவியை காணவில்லை என போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். விசாரணை நடத்திய போலீசாருக்கு பெண் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், ஓராண்டு கழித்து மனிஷ் தான் மனைவியை கொன்றார் என்பது அம்பலமானது. மனிஷை கைது செய்த காவல்துறை, நண்பரின் வீட்டில் இருந்து புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் எலும்புகள் மீட்கப்பட்டு டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

கணவர் மனிஷ்சுக்கு உதவிய நண்பர் தலைமறைவான நிலையில் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.