சேர்ந்து வாழ மறுத்த மனைவியை மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்த கணவன்!!

637

ராமநாதபுரத்தில்..

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் திருவரங்கம் கிராமத்தில் வசித்து வருபவர் செல்வம். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் செல்வம் மதுவிற்கு அடிமையாகிவிட்டார். தினசரி மது அருந்திவிட்டு வந்து லட்சுமியை அடித்து கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் செல்வம் தன்னுடைய மனைவி லட்சுமியை சமாதானம் செய்து, தன்னுடன் வந்து குடித்தனம் நடத்துமாறு கேட்டுள்ளார். ஆனாலும் லட்சுமி இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை .

ஆத்திரத்தில் மனைவி லட்சுமியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். நேற்று கூலி வேலைக்கு சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டு இருந்த லட்சுமியை, இருசக்கர வாகனத்தால் இடித்து கீழே தள்ளினார். அதன் பிறகு மண்வெட்டியை எடுத்து கொடூரமாக அடித்து, கொலை செய்துள்ளார்.


வெட்டி சாய்த்த மண்வெட்டியோடு முதுகுளத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று, அங்கே, தன்னுடைய மனைவியை கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.