சோகம் மட்டுமே மிச்சம்… மாற வேண்டியது மாறாது: நடிகர் பிரசன்னா வேதனை!!

1131

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒரு புறமிருக்க

சாத்தான்குளத்தில் தந்தை- மகன் மரணம், அறந்தாங்கியில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை என நாளுக்கு நாள் கொடூரங்களும் அரங்கேறிவருகின்றன.

இச்சம்பவங்களுக்கு திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவருமே தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.


இந்நிலையில் நடிகர் பிரச்சனா டுவிட்டரில், “ஜெயலலிதா அல்லது ஜெயராஜ் அல்லது ஜெயப்ரியா அது அடுத்த பரபரப்பான மரணம்/ கொலை/ வன்கொடுமை குறித்த செய்தி வரும் வரைதான்.

அதற்கு பிறகு நீதி கேட்கும் ஹேஷ்டேக்குகள் மாறிவிடும். ஆனால் மாற வேண்டிய எதுவும் மாறாது.

சோகம் மட்டுமே மிச்சம், மறதி தேசிய வியாதி என குறிப்பிட்டுள்ளார்.