தனிமையில் பேசலாம்.. நம்பி சென்ற கள்ளக்காதலன்.. கணவனுடன் சேர்ந்து பக்கா பிளான் போட்ட மனைவி!!

695

தலைநகர் டெல்லியில் உள்ள கனாட் பிளேஸ் பகுதியில் பிரபல உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை பார்த்து வந்தவர் 22 வயதான சச்சின். ஆனால் திடீரென்று சச்சின் வேலையை விட்டுவிட்டார்.

இந்நிலையில், கடந்த 31ம் தேதி முதல் சச்சினை திடீரென காணவில்லை. போலீசார் விசாரணை நடத்தியபோதுதான் உத்தரபிரதேச மாநிலம் தஸ்னாவில் இருந்து சச்சின் குமாரின் சடலம் மீட்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை மேலும் தீவிரமானது. அப்போது, உணவன ஓனரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் சச்சின் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும், அந்த ஆத்திரத்தில் அவரை கொன்றதாகவும் உணவன ஓனர் கான் போலீசாரிடம் தெரிவித்தார்.

ஆனால், இந்த விவகாரத்தில் போலீசார் மாறுபட்ட அணுகுமுறையைக் கடைப்பிடித்தனர். கொலை செய்யப்பட்ட சச்சின், கடை ஓனரின் மனைவி பேகத்துடன் தகாத உறவில் இருந்தார். இந்த ஆத்திரத்தில் சச்சின் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சச்சினின் சகோதரர் மோகித் கூறுகையில், ‘‘எனது தம்பி சச்சின் கான் நிறுவனத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தார். கடந்த பிப்ரவரி மாதம் பணப்பிரச்சினையால் வேலையை விட்டு விட்டார்.


வேலை செய்யும் போது கானிடம் இருந்து தம்பி ரூ.2 லட்சம் கடன் வாங்கினார். அதில் ரூ.1 லட்சத்தை திருப்பிக் கொடுத்தார். மீதிப் பணத்தை கேட்டு கானும் அவரது மனைவி பேகமும் தொடர்ந்து மிரட்டி வந்தனர். சம்பவத்தன்று அதாவது மார்ச் 31-ம் தேதி பேகம் எனது தம்பியை சந்தித்து தனியாக பேச வேண்டும் என்று கூறி அழைத்தார்.

இதை நம்பிய எனது தம்பி, அவரது கணவருடன் சேர்ந்து எனது தம்பியின் கழுத்தை அறுத்து சடலத்தை எடுத்துச் சென்றுள்ளனர். அவர்களது மாருதி காரை தஸ்னா காட்டில் வீசினர். ஆனால், இது எங்களுக்குத் தெரியாமல், தம்பி வேலை முடிந்து வீட்டுக்கு வராததால், பல இடங்களில் தேடினோம்..

தம்பியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.. அதன்பிறகுதான் கொலை நடந்திருப்பது எங்களுக்குத் தெரியவந்தது” என்றார். தற்போது, குற்றம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள பல்வேறு சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து, ஜோடியின் காட்சிகளை கைப்பற்றி வருகின்றனர்.

தம்பதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கு பணத் தகராறுதான் காரணம் என்று கூறப்பட்டாலும், ஒரு பக்கம் கணவருக்கு ஆதரவாக இருந்து, இன்னொரு பக்கம் கள்ளக் காதலை பொறியாக வைத்து கொலையை அரங்கேற்றியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.